ABOUT THE DIRECTOR & GURU
Smt. Yalini P. Balendren (specialist in Pediatric Nursing)
- 1996: The first performer of a Bharathanatya Arangetram in Denmark
- 1997: Yalini founded “Narthanalayaa” intending to commit herself to the propagation of the classical arts.
- 2000: Bachelor’s degree in Nursing Health Science in Denmark.
- 2001: Under the guidance of the distinguished exponent of Bharathanatyam, Padmashri Chitra Visweswaran, Yalini received bharathanatya teaching certificate.
- Awarded the title “Nithya Bharatha Jothi” by veena vidwan Pitchumani Iyar and Natya visaratha R. Padma (Naratha Gana Saba in India)
- Nithya Sathangai narthanalayaa’s first bharatanatya arangetram.
- 2003: Specialised in pediatric nursing in Norway.
- 2006: Enrolled as a student at Faculty of Arts, Bharathidasan University at Thiruchirappalli, India
- 2009: B.F.A. degree in Bharathanatyam
- 2011: M.F.A. degree in Bharathanatyam
- Arwarded the title “Bharatha kalaimani” by R. Uma Maheswari (director of Kongu kalamandalm, M.A Yoga, & school headmaster) Ph d student bhrathanatyam, Kalai Kaviri College of Fine Arts
- 2016: Established NSN art in Norway.
ஸ்ரீமதி யாழினி பா.பாலேந்திரன்
அதிபர் & ஆசிரியை
பரதநாட்டிய ஆரம்பக் கல்வியை யாழ் சதங்கை நர்த்தனாலய ஆசிரியை, நடனக் கலாஜோதி லீலா நாராயணன் அவர்களிடம் பயின்றார். பின்னர் திருமதி. மாலா சத்தியமூர்த்தி அவர்களிடத்தில் இக்கலையைக் கற்று டென்மார்க்கில் முதல் மாணவியாக அரங்கேற்றம் செய்து கொண்டவர் என்ற பெருமையும் பெற்றவர். அத்துடன் ஈழத்தமிழர் கலையரங்கத்தினர் 1996ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர் விருதினை வழங்கிக் கௌரவித்தனர். 1998ஆம் ஆண்டு இந்தியாவில் நட்டுவாங்கம் உட்பட பல உருப்படிகளையும் (குச்சுப்புடி, மோகினி ஆட்டம், பொம்மை நடனம்) பயின்று சென்னை நாரதகான சபாவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். இந்நிகழ்வில் “நித்திய பரதஜோதி” என்ற சிறப்புப் பட்டத்தினை வீணை வித்துவான் பிச்சுமணி ஐயர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார். அத்துடன் “நிருத்திய சூடாமணி கலைமாமணி பத்மஸ்ரீ” சித்ரா விஸ்வேஸ்வரனிடம் பரதக்கலையைத் தொடர்ந்து கற்றுக் கொடுப்பதற்கான சான்றிதழையும் பெற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வளாகம் கடந்த நுண்கலைக்கான இளமானி பட்டப்படிப்பை 2006 முதல் கற்றுக்கொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற்று 2009 முதல் முதுமானி பட்டப்படிப்பை அதே பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு 2011ல் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.